Recent Post

6/recent/ticker-posts

பிபா உலகக்கோப்பை கால்பந்து 2026 - 2வது முறையாக ஸ்பெயின் சாம்பியன் / FIFA World Cup 2026 – Spain Became Champion for the Second Time

பிபா உலகக்கோப்பை கால்பந்து 2026 - 2வது முறையாக ஸ்பெயின் சாம்பியன் / FIFA World Cup 2026 – Spain Became Champion for the Second Time

23வது பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தின. பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து, அர்ஜென்டினா ஆகிய அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்தன.

அரையிறுதியில் ஸ்பெயின் 2-0 என பிரான்சையும், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா 2-1 என இங்கிலாந்தையும் வென்றது. இதனை தொடர்ந்து இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா- ஸ்பெயின் அணிகள் மோதின.

ஆட்டத்தின் 106வது நிமிடத்தில், ஸ்பெயின் மாற்று ஆட்டக்காரர் பெர்ரான் டோரஸ் , நிகோ வில்லியம்ஸின் அசிஸ்ட் மூலம் அதிரடியாக கோல் அடித்தார்.

இதன் மூலம் உலகக்கோப்பை கால்பந்துதொடரின் இறுதி போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வெற்றிபெற்று 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணிக்கு ரூ.481 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது.

நடப்பு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்த பிரான்ஸ் அணியின் கேப்டன் எம்பாபேவுக்கு தங்கக் காலணி விருது வழங்கப்பட்டது. இவர் இந்த தொடரில் 10 கோல்கள் அடித்திருந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டும், 8 கோல்கள் அடித்து தங்கக் காலணி விருதை எம்பாபே வென்றிருந்தார். பிஃபா வரலாற்றில் அதிக முறை தங்கக் காலணி விருதை வென்றவர் என்ற சாதனையையும் எம்பாபே படைத்துள்ளார்.

உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படும் வீரருக்கு வழங்கப்படும் தங்கப் பந்து விருது ஸ்பெயின் அணியின் கேப்டன் ரோட்ரிக்கு வழங்கப்பட்டுள்ளது. மிட் ஃபீல்டராக விளையாடிய ரோட்ரி, இந்த தொடர் முழுவதும் ஒரேவொரு கோல் மட்டுமே விட்டுக் கொடுத்து, எதிரணியினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.

உலகக் கோப்பை தொடரில் குறைவான கோல்களை விட்டுக் கொடுக்கும் அணியின் கோல் கீப்பருக்கு கோல்டன் கிளவ் விருது வழங்கப்படும். அந்த வகையில், இந்த தொடர் முழுவதும் 7 ஆட்டங்களிலும் ஸ்பெயின் அணி க்ளீன் ஷீட்டாக விளையாடியது. 5 ஆட்டங்களுக்கு மேல் க்ளீன் ஷீட்டாக விளையாடிய முதல் அணியாக ஸ்பெயின் உள்ளது. இந்த நிலையில், ஸ்பெயின் அணியின் கோல் கீப்பர் உனாய் சைமனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் அணியின் மிடில் டிஃபென்ஸராக விளையாடிய 19 வயதான பாவ் குபார்சிக்கு, சிறந்த இளம் வீரர் விருது வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel