Recent Post

6/recent/ticker-posts

நடப்பு 2026-27 நிதியாண்டில் நாட்டின் நேரடி வரி வசூல் 16.40% உயர்வு / Country's direct tax collection rises by 16.40% in the current 2026-27 fiscal year

நடப்பு 2026-27 நிதியாண்டில் நாட்டின் நேரடி வரி வசூல் 16.40% உயர்வு / Country's direct tax collection rises by 16.40% in the current 2026-27 fiscal year

மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின்படி, 'நாட்டின் வரி வருவாய் முந்தைய நிதியாண்டை விடப் பல மடங்கு அதிகரித்துள்ளது. 

மொத்த வரி வசூல் (Gross Collection) நடப்பு நிதியாண்டு ஜூலை 13 வரை மொத்த நேரடி வரி வசூல் 16.11% என்ற ஆரோக்கியமான வளர்ச்சியுடன் ரூ. 7,73,681.68 கோடியை எட்டியுள்ளது. 

கடந்த நிதியாண்டு (FY 2025-26), இதே காலகட்டத்தில் மொத்த வரி வசூல் 6,66,337.20 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வழங்கப்பட்ட Refund தொகைகள் போக, அரசின் கைவசமுள்ள நிகர வரி வசூல் 16.40% என்ற அசுர வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட நிகர கார்ப்பரேட் வரி வசூல் கடந்த ஆண்டின் 1,96,905.48 கோடியிலிருந்து, தற்பொழுது அது 2,40,241.64 கோடியாக உயர்ந்துள்ளது.

கார்ப்பரேட் அல்லாத தனிநபர் வருமான நிகர வரி வசூல் 3,84,521.23 கோடியாக அதிகரித்துள்ளது. பங்குச்சந்தை முதலீடுகள் மூலமான எஸ்.டி.டி வரி வசூல் கடந்த ஆண்டின் 17,875.88 கோடியிலிருந்து, தற்பொழுது அது 26,428.96 கோடியாகக் கணிசமாக உயர்ந்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் ஜூலை 13 வரை, கடந்த ஆண்டை விட 14.57% கூடுதலாக, மொத்தம் 1,22,491.87 கோடி வரி செலுத்துவோருக்குத் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ. 1,06,912.48 கோடி மட்டுமே ரீஃபண்ட் வழங்கப்பட்டிருந்தது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel