பிரிக்ஸ் தலைமைத்துவம் 2026-ன் கீழ் கேரளத்தின் கொச்சியில் பிரிக்ஸ் மகளிர் பணிக்குழு கூட்டம் இன்று (06.07.2026) தொடங்கியது. மகளிருக்கு அதிகாரம் அளித்தல், மகளிர் தலைமையிலான வளர்ச்சி, பகிரப்பட்ட நலன்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் போன்ற முக்கிய விஷயங்கள் பற்றி விவாதிக்கும் இந்த இரண்டு நாள் கூட்டத்தில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் மூத்த அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில் பிரதிநிதிகளை வரவேற்றுப் பேசிய மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சக செயலாளர் திரு அனில் மாலிக், புவியியல் ரீதியாக நாம் பிரிந்திருந்தாலும் மகளிருக்கு அதிகாரம் அளிப்பதை விரிவுபடுத்துவதற்கான நமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டில் நாம் நெருக்கமாக இணைக்கப்பட்டிருக்கிறோம் என்றார்.
மீள்தன்மை, புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றை கட்டமைத்தல் என்பது இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவ கூட்டத்தின் மையப்பொருளாகும். இது மக்களை மையப்படுத்திய மனித சமூகத்தை முதன்மைப்படுத்திய அணுகுமுறையை பிரதிபலிப்பதாகும்.
பணிக்குழு கூட்டத்தைத் தொடர்ந்து 2026 ஜூலை 8, 9 தேதிகளில் கொச்சியில் இரண்டு நாட்கள் அமைச்சர்கள் நிலையிலான கூட்டம் நடைபெறும்.


0 Comments