விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் உடன் சின்னர் பலப்பரீட்சை மேற்கொண்டார்.
உலக டென்னிஸ் வீரர்களுக்கான (ஆடவர்) தரவரிசையில் சின்னர் முதலிடத்திலும், ஸ்வெரேவ் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-7(7), 7-6(2), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்வெரேவை வீழ்த்தினார் சின்னர். இதன் மூலம் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அவர் தக்கவைத்தார்.
கடந்த 25 ஆண்டுகளில் ரோஜர் ஃபெடரர், ஜோகோவிச், அல்கராஸ் ஆகியோருக்கு அடுத்ததாக விம்பிள்டனில் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்த நான்காவது வீரர் ஆனார் ஜன்னிக் சின்னர்.


0 Comments