Recent Post

6/recent/ticker-posts

கோயம்புத்தூரில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் 29-வது கூட்டம் / 29th Meeting of the National Tiger Conservation Authority in Coimbatore

கோயம்புத்தூரில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் 29-வது கூட்டம் / 29th Meeting of the National Tiger Conservation Authority in Coimbatore

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (என்டிசிஏ) -வின் 29-வது கூட்டம் இன்று (09.07.2026) கோயம்புத்தூரில் உள்ள மாநில வனப் பணிக்கான மத்திய அகாடமியில் (CASFOS) நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு, மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை அமைச்சரும், என்டிசிஏ-வின் தலைவருமான திரு பூபேந்தர் யாதவ் தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு ராஜீவ் பிரதாப் ரூடி, திரு. ஹரிஷ் சந்திர மீனா, ஆணையத்தின் பிற உறுப்பினர்கள், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், புலிகள் வாழிட மாநிலங்களின் தலைமை வனவிலங்கு காப்பாளர்கள், புலிகள் காப்பகங்களின் கள இயக்குநர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நாட்டில் புலிகள் பாதுகாப்பு, வனவிலங்கு மேலாண்மை ஆகியவை தொடர்பான முக்கிய கொள்கை, மேலாண்மை, நிறுவனப் பிரச்சினைகள் ஆகியவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்தியாவின் புலிகள் வாழ்விடங்களில் பாதுகாப்பை வலுப்படுத்துதல், மேலாண்மை நடைமுறைகளை மேம்படுத்துதல், பாதுகாப்பு அம்சங்களை அதிகரித்தல் ஆகியவற்றில் இந்த விவாதங்கள் கவனம் செலுத்தின.

முந்தைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் செயலாக்கத்தை ஆணையம் ஆய்வு செய்ததுடன், புலிகளின் வாழ்விடங்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கம் கொண்ட முன்மொழிவுகளையும் பரிசீலித்தது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel