ஆஸ்திரேலிய பிரதமர் திரு ஆண்டனி அல்பானீஸீன் அழைப்பின் பேரில் பிரதமர் திரு நரேந்திர மோடி, 2026 ஜூலை 8 முதல் 10-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொள்கிறார். அவர் மெல்பெர்னில் இந்தியா – ஆஸ்திரேலியா 3வது வருடாந்திர உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார்.
அப்போது வரலாற்று உறவுகள், மக்களிடையேயான தொடர்புகள், பகிரப்பட்ட உத்திசார் நலன்கள், பரஸ்பர மரியாதை ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இடையேயான நீண்டகால நட்புறவை இருதலைவர்களும் நினைவுகூர்ந்தனர்.
விரைவாக மாறி வரும் உலகளாவிய சூழலில் உருவாகும் சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும் பிராந்தியத்தின் அமைதி, வளம், ஸ்திரத்தன்மைக்கு நன்மை பயக்கக் கூடிய புதிய ஒத்துழைப்புக்கான வழிவகைகளை ஆராய்வதற்கும் இந்தியா – ஆஸ்திரேலியா இடையே விரிவான உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும், விரிவுபடுத்தவும் இருதலைவர்களும் தங்களுடைய அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தினார்கள்.
ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பது இருநாட்டுக் கூட்டாண்மையின் அடித்தளம் என்பதை இருநாட்டு பிரதமர்களும் உறுதிபடுத்தினார்கள். இதற்காக ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான கூட்டுத் தீர்மானத்தை அவர்கள் அறிவித்தனர்.


0 Comments