Recent Post

6/recent/ticker-posts

உத்தரப்பிரதேசத்தில் கான்பூர் – கப்ராய் இடையே 4 / 6 வழித்தடங்களைக் கொண்ட சாலை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet Approves 4/6-Lane Road Project Between Kanpur and Kabrai in Uttar Pradesh

உத்தரப்பிரதேசத்தில் கான்பூர் – கப்ராய் இடையே 4 / 6 வழித்தடங்களைக் கொண்ட சாலை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet Approves 4/6-Lane Road Project Between Kanpur and Kabrai in Uttar Pradesh

உத்தரப்பிரதேசத்தில் கான்பூர் – கப்ராய் இடையே 117.7 கிமீ தொலைவிற்கு பசுமை வழி நெடுஞ்சாலையை அமைக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின் கீழ், போபால் – கான்பூர் பொருளாதார வழித்தடத்தின் முக்கியப் பகுதியாக உள்ள இத்திட்டம் தற்போது 4 வழித்தடங்களைக் கொண்ட சாலையாகவும் எதிர்காலத்தில் 6 வழித்தடங்களாக விரிவுபடுத்தும் வகையிலும் வடிவமைக்கப்படுகிறது.

ரூ.7,145.14 கோடி மதிப்பிலான இத்திட்டத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கக் கட்டண முறையில் செயல்படுத்தும். அத்துடன் தேசிய நெடுஞ்சாலை 34-ன் கான்பூர் – கப்ராய் பகுதியின் பராமரிப்பு, செயல்பாட்டு பணிகளை அது மேற்கொள்ளும்.

இத்திட்டம் கான்பூர் – கப்ராய் இடையே தடையற்ற, அதிவிரைவு போக்குவரத்தை உறுதி செய்வதோடு சாகர், போபால் மற்றும் மத்தியப்பிரதேசத்தின் பிற பகுதிகளுக்கான போக்குவரத்து இணைப்பையும் வலுப்படுத்தும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel