Recent Post

6/recent/ticker-posts

பிரதமரின் கிசான் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு - மத்திய அமைச்சரவை ஒப்புதல் / PM-Kisan Scheme Extended for Another 5 Years: Union Cabinet Approves Rs 3.15 Lakh Crore Allocation

பிரதமரின் கிசான் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு -  மத்திய அமைச்சரவை ஒப்புதல் / PM-Kisan Scheme Extended for Another 5 Years: Union Cabinet Approves Rs 3.15 Lakh Crore Allocation

பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதி (பிரதமரின் கிசான் திட்டம்) திட்டத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு (2026-27 முதல் 2030-31 வரை) தொடர, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இத்திட்டத்திற்கு மொத்தம் ரூ.3.15 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் வளமே நாட்டின் வளத்திற்கு அடிப்படை என்ற அரசின் உறுதியான அர்ப்பணிப்பை இந்த நடவடிக்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இத்திட்டத்தின் மூலம் தகுதியுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு நேரடிப் பணப் பரிமாற்ற முறையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளிப்படைத்தன்மையுடன் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

23-வது தவணையில் மட்டும் ரூ.18,984 கோடிக்கும் அதிகமான தொகை விடுவிக்கப்பட்டு 9.49 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்ததுள்ளனர்.

கொவிட் காலத்தில் விவசாயிகளுக்கு ரூ.1.71 லட்சம் கோடிக்கும் அதிகமாக நிதி உதவி வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் பெண் விவசாயிகளுக்கு ரூ.1.06 லட்சம் கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளதுடன், பயனாளிகளில் நான்கு பேரில் ஒருவர் பெண் விவசாயி என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel