Recent Post

6/recent/ticker-posts

தில்லியின் நெல்சன் மண்டேலா மார்க் உடன் துவாரகா விரைவுச் சாலையை இணைக்கும் 6 வழிச்சாலை சுரங்கப்பாதை கட்டுமானத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves construction of a 6-lane tunnel connecting Dwarka Expressway with Nelson Mandela Marg in Delhi

தில்லியின் நெல்சன் மண்டேலா மார்க் உடன் துவாரகா விரைவுச் சாலையை இணைக்கும் 6 வழிச்சாலை சுரங்கப்பாதை கட்டுமானத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. 

இத்திட்டம் 8.1 கிமீ நீளத்தில் ரூ.6,969.67 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இது மேற்கு, தெற்கு, தில்லிக்கு இடையே விரைவான போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்தும். குருகிராம், துவாரகா, இந்திரா காந்தி விமான நிலையம், மேற்கு தில்லியிலிருந்து தெற்கு தில்லி நோக்கிச் செல்லும் போக்குவரத்திற்குப் பயனளிக்கும்.

எய்ம்ஸ், மஹிபால்பூர் இடையே உயர்மட்ட சாலையை அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இந்த இணைப்பு சுரங்கப்பாதையை பாரமுல்லா உயர்மட்டச் சாலையுடன் இணைக்கும். இதன் மூலம் மேற்கு, தெற்கு தில்லிப் பகுதிகள், கிழக்கு தில்லி, காசியாபாத், நொய்டா ஆகியவற்றுடன் இணைக்கப்படும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel