Recent Post

6/recent/ticker-posts

இந்திய - ஜப்பான் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தானது / Agreements Signed Between India and Japan

இந்திய - ஜப்பான் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தானது / Agreements Signed Between India and Japan

இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதையடுத்து, இரு தலைவர்களும் கூட்டாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

டெல்லியில் இன்றுநடைபெற்ற 16-ஆவது இந்தியா - ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டில், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பல வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த உச்சிமாநாட்டின் மிக முக்கிய அம்சமாக, இந்தியாவின் கிராமப்புறப் பொருளாதாரம் மற்றும் தூய்மையான எரிசக்தித் துறையை மேம்படுத்தும் நோக்கில் ஒரு பிரம்மாண்ட கூட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் 1,000 உயிரி-வாயு மற்றும் இயற்கை உர ஆலைகளை அமைப்பதற்கான இறுதி ஒப்பந்தத்தில் ஜப்பான் கையெழுத்திட்டுள்ளது. ஜப்பானின் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நிதி முதலீட்டுடன் இந்த ஆலைகள் நிறுவப்பட உள்ளன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel