Recent Post

6/recent/ticker-posts

சாரநாத்தின் பழமையான பௌத்த தளம் யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது / Ancient Buddhist Site at Sarnath Added to UNESCO World Heritage List

சாரநாத்தின் பழமையான பௌத்த தளம் யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது / Ancient Buddhist Site at Sarnath Added to UNESCO World Heritage List

தென் கொரியாவின் புசான் நகரில் நடைபெற்று வரும் உலக பாரம்பரியக் குழுவின் 48-வது கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தக்க முடிவின்படி, 2025-26-ம் ஆண்டிற்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ பரிந்துரையின்படி, சாரநாத்தின் பழமையான பௌத்த தளம் யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், இத்தகைய அங்கீகாரத்தைப் பெறும் இந்தியாவின் 45-வது தளமாக இது திகழ்கிறது. கட்டடக்கலைச் சிறப்பு, பிராந்திய அடையாளம், சரித்திரத் தொடர்ச்சி போன்ற பன்முகத்தன்மை கொண்ட மரபுகளை வெளிப்படுத்தும் இந்தியாவின் நீடித்த கலாச்சாரப் பாரம்பரியத்தை, இந்த உலகளவிலான அங்கீகாரம் மூலம் கொண்டாடப்படுகிறது.

யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள இந்தத் தொகுப்புத் தளம், உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள இரண்டு முக்கியப் பகுதிகளைக் கொண்டுள்ளது.

அவை சௌகண்டி ஸ்தூபி, சாரநாத்தின் தொல்பொருள் எச்சங்கள் (தமேக் ஸ்தூபி, தர்மராஜிகா ஸ்தூபி, மூலகந்தகுடி விகாரம், அசோகர் தூண் போன்றவை) ஆகும்.

பௌத்த மரபில் ரிஷிபதனம், இஷிபதனம், மிருகதவம் போன்ற பல்வேறு பெயர்களால் அறியப்படும் சாரநாத் எனும் பழமையான இடத்தின் கட்டடக்கலை, தொல்பொருள் எச்சங்களை இவை ஒன்றிணைத்துப் பாதுகாக்கின்றன.

இவை அனைத்தும் ஒரு புனிதமான இடத்தைக் குறிக்கின்றன. இங்குதான் கி.மு. 6-ம் நூற்றாண்டில், புத்தர் வருகை தந்து, "தர்மசக்கர பிரவர்த்தனம்" (அறத்தின் சக்கரத்தைச் சுழற்றுதல்) என்று அழைக்கப்படும் தனது முதல் போதனையை வழங்கினார்.

இந்நிகழ்வு பௌத்த சங்கத்தின் தோற்றத்திற்கும், ஆர்ய அஷ்டாங்க மார்க்கம்'(எட்டு நல்வழிகள்) எனும் கோட்பாடுகளின் நிறுவலுக்கும் அடித்தளமாக அமைந்தது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel