சென்னை, மாநிலக் கல்லூரி அரங்கில், செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், நலம் டிஎன் என்ற புதிய இணையதள சேவையை முதல்வர் தொடக்கிவைத்தார்.நலம் டிஎன் இணையதளம் மூலம் கார்ப்பரேட்கள் முதல் பொதுமக்கள் வரையிலான நன்கொடையாளர்கள் தமிழ்நாடு அரசு மருத்துவமனைக்கு எளிமையாக நன்கொடை வழங் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் 751 உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
ரூ.139.47 கோடி மதிப்பீட்டில் மருத்துவ கட்டடங்களை திறந்து வைத்து, நவீன உபகரணங்களின் பயன்பாட்டினையும் முதல்வர் தொடக்கி வைத்தார்.


0 Comments