திமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதல்வர் ஸ்டாலினால் கொண்டு வரப்பட்ட முதலமைச்சர் காலை உணவு திட்டம் எனும் பெயரில் செயல்படுத்தப்பட்டுவரும் இந்தத் திட்டத்தை விரிவாக்கம் செய்து தந்தை பெரியாரின் பிறந்தநாளான வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி முதல் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்தார்.
இந்நிலையில் தற்போது, 'முதலமைச்சர் காலை உணவு திட்டம்' எனும் பெயரை மாற்றி, 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஏற்கெனவே 'நான் முதல்வர்', 'முதல்வர் பதிப்பகம்' உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களின் பெயர்களைத் தவெக அரசு மாற்றியமைத்த நிலையில், தற்போது காலை உணவுத் திட்டத்தின் பெயரையும் மாற்றம் செய்துள்ளது.


0 Comments