இந்தியாவில் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கான தடுப்பூசிக்கு முதல் முறையாக மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைமை இயக்குநரகம் (டிசிஜிஐ) சந்தைப்படுத்தல் அனுமதி வழங்கியுள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த டகேடா (Takeda) மருந்து நிறுவனத்தின் QDENGA (TAK-003) என்ற டெங்கு தடுப்பூசிக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டிரு நாட்டின் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
டெங்கு காய்ச்சல் இந்தியாவில் ஆண்டுதோறும் பருவமழைக் காலங்களில் அதிகரித்து, ஆயிரக்கணக்கானோருக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதுவரை கொசு ஒழிப்பு, விழிப்புணர்வு மற்றும் நோய் அறிகுறிகளுக்கான சிகிச்சை ஆகியவை மட்டுமே முக்கி வழிமுறைகளாக இருந்து பறதி நிலையில், தற்போது தடுப்பூசிக்கும் ஒப்புதல் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
QDENGA என்பது உயிருடன் பலவீனப்படுத்தப்பட்ட (Live-attenuated), நான்கு வகை (Tetravalent) தடுப்பூசியாகும். டெங்கு வைரஸின் நான்கு முக்கிய ₹செரோடைப்புகளுக்கும் (DENV-1, DENV-2, DENV-3, DENV-4) எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி இரண்டு தவணைகளாக-முதல் டோஸ் செலுத்தப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் செலுத்தும் வகையில் வழங்கப்படுகிறது.


0 Comments