Recent Post

6/recent/ticker-posts

தாய்லாந்து நாட்டில் "தமிழி" எழுத்து பொறிக்கப்பட்ட ஒரு தங்க முத்திரை மோதிரம் கண்டெடுப்பு / Gold Signet Ring Inscribed with "Tamizhi" Script Discovered in Thailand

தாய்லாந்து நாட்டில் "தமிழி" எழுத்து பொறிக்கப்பட்ட ஒரு தங்க முத்திரை மோதிரம் கண்டெடுப்பு / Gold Signet Ring Inscribed with "Tamizhi" Script Discovered in Thailand

தாய்லாந்து நாட்டின் பெட்சாபுரி மாகாணத்தில் உள்ளது டான்யாய் தாங் என்ற பகுதியில் தொல்லியல் துறையினர் தீவிரமாக அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அப்போது அங்கு பழமையான ஒரு புதைவிடம் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த புதைவிடத்தை முழுமையாகத் தோண்டி ஆய்வு செய்தபோது, அங்கு வடகிழக்கு திசையில் தலை வைக்கப்பட்ட நிலையில் புதைக்கப்பட்ட 8 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.

அவற்றுடன் சேர்த்து அந்தப் பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பல்வேறு தொல்பொருட்களும் கிடைத்துள்ளன. அதில் ஒரு தங்க மோதிரமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த மோதிரத்தை உடனடியாக வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்தார்கள்.

முதலில் பிராமி என்று தவறாகப் படிக்கப்பட்ட எழுத்துக்களை அது இடவல மாற்றமாக (Mirror Image எழுதப்பட்ட தமிழி எழுத்துக்கள்தான் என சிங்கப்பூர் சார் குழுவின் ரஞ்சித் குமார் கண்டறிந்துள்ளார்.

அச்சிடுவதற்கு ஏதுவாக தலைகீழாகப் பொறிக்கப்பட்டுள்ள அந்த மோதிரத்தில் அளர் வைரதன் என்ற தமிழரின் பெயர் உள்ளது உறுதியாகியுள்ளது. 'அளர்' என்பது வளமான மருத நிலத்தைக் குறிக்கும். தமிழ் சொல் என தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel