ஹிட்டாச்சி குழுமம், உலகளாவிய பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லிமிடெட் மற்றும் ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இக்குழுமத்தின் துணை நிறுவனங்கள் ஆகும்.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், சென்னை போரூரில் உள்ள ஹிட்டாச்சி குழுமத்தைச் சேர்ந்த உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மைய விரிவாக்கத் திட்டம் மற்றும் செங்கல்பட்டில் உள்ள ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி திட்ட விரிவாக்கத்திற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம், 3 முதல் 5 ஆண்டுகளில், ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு மற்றும் கூடுதலாக, ஆயிரம் நபர்களுக்கு உயர்தர தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் உருவாகும்.


0 Comments