Recent Post

6/recent/ticker-posts

ககன்யான் திட்டத்திற்கான ஒருங்கிணைந்த பாராசூட் சோதனை வெற்றி / Integrated Parachute Test for Gaganyaan Mission Successful

ககன்யான் திட்டத்திற்கான ஒருங்கிணைந்த பாராசூட் சோதனை வெற்றி / Integrated Parachute Test for Gaganyaan Mission Successful

விண்கலன் என்பது விண்வெளி வீரர்கள் ஏவுதலின் போதும், விண்வெளிப் பயணங்களின் போதும் மற்றும் கடலில் வந்து இறங்கும் போதும் தங்கியிருக்கக்கூடிய ஒரு சிறப்பு அழுத்தப்பட்ட விண்வெளி வாகனமாகும்.

இதற்கிடையில், சோதனைகளை மேற்கொள்வதற்காக திண்ம மோட்டாரை அடிப்படையாகக் கொண்ட 'பரிசோதனைகளுக்கான துணை-வட்டப்பாதை ஏவுகணை' என்ற திட்டத்தை தாங்கள் உருவாக்கி வருவதாக இஸ்ரோ சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இது பல்வேறு சோதனைச் சூழல்களின் கீழ் ஏராளமான பரிசோதனைகளைச் செய்யக்கூடிய ஒரு சிறப்பு சோதனை ராக்கெட்டாகும்.

இத்தகைய சோதனைகளின் போது, விண்கலனானது 10 முதல் 17 கி.மீ உயரத்தில் இருக்கும்போது இந்த ஏவுகணையிலிருந்து பிரிக்கப்படும்.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ மையத்தில் ஜூலை 3-ஆம் தேதி நடைபெற்ற இந்தச் சோதனையின் போது சுமார் 10 பாராசூட்டுகள் பயன்படுத்தப்பட்டதாக இஸ்ரோ மேலும் தெரிவித்துள்ளது.

விண்கலன் கீழே இறங்கி கடலில் வந்து விழுவதற்கு ஏதுவாக, அதன் வேகத்தைக் குறைப்பதில் இந்த பாராசூட்டுகள் முதன்மையான பங்காற்றுகின்றன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel