பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) ஆஸ்திரேலியா நாட்டிற்கு அரசு முறை மேற்கொண்டார். அவருக்கு அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இரு நாட்டு தலைவர்களும் இருதரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்களிலும் எட்டப்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஆய்வு செய்தனர்.
மேலும், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள், இணையம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், விண்வெளி, அணுசக்தி, தூய்மை எரிசக்தி, கல்வி, மக்களுக்கு இடையேயான உறவுகள் உள்ளிட்ட முன்னுரிமைத் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே சில முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அவற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக ராணுவம் மற்றும் ஒத்துழைப்புக் குறித்த கூட்டுத் தீர்மானம், கடல்சார் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு நடவடிக்கை, எரிசக்தி பாதுகாப்பு குறித்த இந்தியா - ஆஸ்திரேலியா கூட்டறிக்கை, இந்தியா - ஆஸ்திரேலியா சிவில் அணு ஒப்பந்தத்தின் நிர்வாக ஏற்பாடுகளை இறுதி செய்தல், இணையம், முக்கியத் தொழில்நுட்பங்கள், விநியோக முறைகளுக்கான ஆஸ்திரேலியா - இந்தியா கூட்டாண்மை ஆகிய உள்ளன.


0 Comments