உயர்தர அறிவியல், தொழில்நுட்ப, அறிவுசார் சொத்துரிமைத் தகவல்களுக்கான அணுகலை வலுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் காப்புரிமைகள், வடிவமைப்புகள், வர்த்தக முத்திரைகளின் தலைமை கட்டுப்பாட்டாளர் அலுவலகமான சிஜிபிடிடிஎம்-மும் (CGPDTM), சிஎஸ்ஐஆர்-தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனமான என்ஐஎஸ்சிபிஆர்-ம் (CSIR-NIScPR) தேசிய அறிவு வள கூட்டமைப்பில் (NKRC- என்கேஆர்சி) பங்கேற்பதற்காக இன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இரு அமைப்புகளின் செயல்பாடுகளையும், உலகத் தரம் வாய்ந்த அறிவியல், தொழில்நுட்பத் தகவல் வளங்களைத் தடையின்றி அணுகுவதில் என்கேஆர்சி-யின் பங்கையும் எடுத்துரைக்கும் விளக்கக்காட்சிகள் இடம்பெற்றன.
இரு முதன்மை அமைப்புகளுக்கு இடையேயான ஒத்துழைப்பின் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தை இந்தப் புரிந்துணர் ஒப்பந்தம் குறிக்கிறது.
இந்த ஒத்துழைப்பானது, உலகளாவிய அறிவு வளங்களுக்கான அணுகலை வலுப்படுத்தி, அறிவுசார் சொத்துரிமை நிர்வாகத்திற்கான ஆதரவை மேம்படுத்தி, தரமான அறிவியல் தகவல்கள் மூலம் முடிவெடுப்பதை எளிதாக்கும்.


0 Comments