Recent Post

6/recent/ticker-posts

கீழடி அகழாய்வில் மீன் உருவம் பொறித்த அரிய பானை கண்டெடுப்பு / Rare Pot Featuring Fish Motif Unearthed at Keeladi Excavation Site

கீழடி அகழாய்வில் மீன் உருவம் பொறித்த அரிய பானை கண்டெடுப்பு / Rare Pot Featuring Fish Motif Unearthed at Keeladi Excavation Site

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 11-ஆம் கட்ட அகழாய்வில், மீன் உருவம் பொறிக்கப்பட்ட முழுமையான சுடுமண் பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் தொடங்கிய 11-ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை 9 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டுள்ளன.

அவற்றில் உறைகிணறுகள், சுடுமண் பானைகள், சுருள் வடிவ மற்றும் பீப்பாய் வடிவ வடிகால் அமைப்புகள், மூடிய மற்றும் திறந்த வடிகால் அமைப்புகள், செங்கல் கட்டுமானங்கள் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

முதலில் தோண்டப்பட்ட குழியில், சுமார் 160 செ.மீ. ஆழத்தில், ஒரு அடி விட்டமும் ஒரு அடி உயரமும் கொண்ட இரு நிற சுடுமண் பானை முழுமையாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அந்தப் பானையின் மேற்பகுதியில் மீன் உருவம் கோட்டுச் சித்திரமாக பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பும் கீழடி அகழாய்வில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட உறைகிணறு மற்றும் பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel