Recent Post

6/recent/ticker-posts

வருவாயை உயர்த்த மாண்டேக் சிங் தலைமையில் குழு அமைப்பு தமிழக அரசு அறிவிப்பு / Tamil Nadu Government Announces Committee Headed by Montek Singh to Boost Revenue

வருவாயை உயர்த்த மாண்டேக் சிங் தலைமையில் குழு அமைப்பு தமிழக அரசு அறிவிப்பு / Tamil Nadu Government Announces Committee Headed by Montek Singh to Boost Revenue

தமிழ்நாடு பட்ஜெட்டின் நிதி நிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5 அன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு அரசின் வருவாயை பெருக்கும் குழுவின் தலைவராக மான்டேக் சிங் நியமிக்கட்டுள்ளார்.

இவர் தலைமையிலான குழுவினர்கள், மாநிலத்தில் வருவாய் ஆதாரங்களை பெருக்க, வழிமுறைகளை ஆராய்ந்து தமிழக அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மான்டேக் சிங் தலைமையிலான குழு, வரி மற்றும் வரியில்லா வருவாயை அதிகரிக்க கொள்கை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை அரசுக்கு வழங்க உள்ளது.

மேலும் மாநிலத்திற்கு தேவையான புதிய வருவாய் ஆதாரங்களை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ள உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த குழு, தமிழ்நாடு அரசிடம் மூன்று மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel