UNIFIED DISTRICT INFORMATION SYSTEM FOR EDUCATION PLUS REPORT 2025 - 2026
2025 - 2026ஆம் ஆண்டிற்கான UDISE+ அறிக்கை
TAMIL
UNIFIED DISTRICT INFORMATION SYSTEM FOR EDUCATION PLUS REPORT 2025 - 2026 / 2025 - 2026ஆம் ஆண்டிற்கான UDISE+ அறிக்கை: 2025-26 கல்வியாண்டில் டிஜிட்டல் உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கணினி வசதி கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கை 2024-25 இல் 64.7% ஆக இருந்தது, தற்போது 69.9% ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, இணையதள வசதி (Internet) கொண்ட பள்ளிகள் 63.5%-லிருந்து 67.4% ஆக அதிகரித்துள்ளன.
அடிப்படை வசதிகளைப் பொறுத்தவரை, 95% பள்ளிகளில் மின்சார வசதியும், 98.5% பள்ளிகளில் மாணவிகளுக்கான கழிப்பறை வசதியும், 97.2% பள்ளிகளில் மாணவர்களுக்கான கழிப்பறை வசதியும் உள்ளன. மேலும், 96.9% பள்ளிகளில் கைகழுவும் வசதியும், 99.5% பள்ளிகளில் பாதுகாப்பான குடிநீர் வசதியும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
டிஜிட்டல் உள்கட்டமைப்பு, மின்சார வசதி, மாணவர் சேர்க்கை, தக்கவைப்பு (Retention), பள்ளி இடைநிற்றல் விகிதம் மற்றும் பாலின/சமூக அடிப்படையிலான சமத்துவம் ஆகிய முக்கிய காரணிகளை உள்ளடக்கிய கூட்டு மதிப்பீட்டின் (Composite Assessment) அடிப்படையில் இந்தத் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
சிறந்த பள்ளி உள்கட்டமைப்பு கொண்ட டாப் 10 மாநிலங்களின் விவரம்
தமிழ்நாடு: அனைத்து உள்கட்டமைப்புகளிலும் சிறந்து விளங்கி 94.4% கூட்டு மதிப்பெண்ணுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இங்கு 94.4% கணினி வசதியும், 99.0% இணையதள வசதியும், 100.0% மின்சார வசதியும் உள்ளது.
ஒடிசா: 90.6% கூட்டு மதிப்பெண்ணுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கு 83.2% கணினி வசதியும், 82.9% இணையதள வசதியும், 97.3% மின்சார வசதியும் உள்ளது.
பஞ்சாப்: 89.9% கூட்டு மதிப்பெண்ணுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. இங்கு 99.1% கணினி வசதியும், 91.5% இணையதள வசதியும், 100.0% மின்சார வசதியும் உள்ளது.
மகாராஷ்டிரா: 89.7% கூட்டு மதிப்பெண்ணுடன் நான்காம் இடத்தில் உள்ளது. இங்கு 83.6% கணினி வசதியும், 77.9% இணையதள வசதியும், 97.0% மின்சார வசதியும் உள்ளது.
கேரளா: 89.2% கூட்டு மதிப்பெண்ணுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது. இங்கு 99.5% கணினி வசதியும், 92.6% இணையதள வசதியும், 99.9% மின்சார வசதியும் உள்ளது.
குஜராத்: 87.1% கூட்டு மதிப்பெண்ணுடன் ஆறாம் இடத்தில் உள்ளது. இங்கு 97.7% கணினி வசதியும், 96.8% இணையதள வசதியும், 99.9% மின்சார வசதியும் உள்ளது.
ஹரியானா: 86.8% கூட்டு மதிப்பெண்ணுடன் ஏழாம் இடத்தில் உள்ளது. இங்கு 97.6% கணினி வசதியும், 83.2% இணையதள வசதியும், 100.0% மின்சார வசதியும் உள்ளது.
இமாச்சல பிரதேசம்: 84.4% கூட்டு மதிப்பெண்ணுடன் எட்டாம் இடத்தில் உள்ளது. இங்கு 87.2% கணினி வசதியும், 66.2% இணையதள வசதியும், 99.4% மின்சார வசதியும் உள்ளது.
ஆந்திர பிரதேசம்: 84.1% கூட்டு மதிப்பெண்ணுடன் ஒன்பதாம் இடத்தில் உள்ளது. இங்கு 76.9% கணினி வசதியும், 99.2% இணையதள வசதியும், 99.8% மின்சார வசதியும் உள்ளது.
அசாம்: 83.2% கூட்டு மதிப்பெண்ணுடன் பத்தாம் இடத்தில் உள்ளது. இங்கு 85.0% கணினி வசதியும், 89.0% இணையதள வசதியும், 90.8% மின்சார வசதியும் உள்ளது.
ENGLISH
UNIFIED DISTRICT INFORMATION SYSTEM FOR EDUCATION PLUS REPORT 2025 - 2026: Significant progress has been made in digital infrastructure during the 2025-26 academic year. The percentage of schools with computer facilities rose from 64.7% in 2024-25 to 69.9%. Similarly, the proportion of schools with internet connectivity increased from 63.5% to 67.4%.
Regarding basic amenities, 95% of schools have electricity, 98.5% have toilet facilities for girl students, and 97.2% have toilet facilities for boy students. Furthermore, handwashing facilities are available in 96.9% of schools, and access to safe drinking water is ensured in 99.5% of schools.
This ranking list has been prepared based on a 'Composite Assessment' that encompasses key factors such as digital infrastructure, electricity supply, student enrollment, retention rates, school dropout rates, and gender/social equity.
Details of the Top 10 States with the Best School Infrastructure
Tamil Nadu: Secured the first place with a composite score of 94.4%, excelling across all infrastructure categories. It boasts 94.4% computer coverage, 99.0% internet connectivity, and 100.0% electricity coverage.
Odisha: Ranked second with a composite score of 90.6%. It has 83.2% computer coverage, 82.9% internet connectivity, and 97.3% electricity coverage.
Punjab: Ranked third with a composite score of 89.9%. It has 99.1% computer coverage, 91.5% internet connectivity, and 100.0% electricity coverage.
Maharashtra: Ranks fourth with a composite score of 89.7%. It has 83.6% computer facilities, 77.9% internet connectivity, and 97.0% electricity coverage.
Kerala: Ranks fifth with a composite score of 89.2%. It has 99.5% computer facilities, 92.6% internet connectivity, and 99.9% electricity coverage.
Gujarat: Ranks sixth with a composite score of 87.1%. It has 97.7% computer facilities, 96.8% internet connectivity, and 99.9% electricity coverage.
Haryana: Ranks seventh with a composite score of 86.8%. It has 97.6% computer facilities, 83.2% internet connectivity, and 100.0% electricity coverage.
Himachal Pradesh: Ranks eighth with a composite score of 84.4%. It has 87.2% computer facilities, 66.2% internet connectivity, and 99.4% electricity coverage.
Andhra Pradesh: Ranks ninth with a composite score of 84.1%. It has 76.9% computer facilities, 99.2% internet connectivity, and 99.8% electricity coverage.
Assam: Ranks tenth with a composite score of 83.2%. It has 85.0% computer facilities, 89.0% internet connectivity, and 90.8% electricity coverage.


0 Comments