Recent Post

6/recent/ticker-posts

மும்பை மருத்துவர்கள் 2 பேருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது / Pakistan's Prestigious Award for Two Mumbai Doctors

மும்பை மருத்துவர்கள் 2 பேருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது / Pakistan's Prestigious Award for Two Mumbai Doctors

கடந்த 1946-ம் ஆண்டு, இந்தியப் பிரிவினைக்கு முந்தைய காலகட்டத்தில், முகம்மது அலி ஜின்னாவுக்கு கடுமையான காசநோய் பாதிப்பு இருந்ததை மும்பையைச் சேர்ந்த பார்சி சமூக மருத்துவர்களான டாக்டர் ஜல் ரத்தன்ஜி படேல் மற்றும் டாக்டர் ஜல் தய்போ-கூ ஆகியோர் கண்டறிந்தனர்.

ஜின்னாவின் எக்ஸ்-ரே முடிவுகளை ஆய்வு செய்த அவர்கள், ஜின்னா இன்னும் ஓரிரு ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருக்க முடியும் என்ற அதிர்ச்சி உண்மையை உணர்ந்தனர்.

அக்காலகட்டத்தில் இந்த தகவல் அரசியல் ரீதியாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதால், மருத்துவர்கள் இருவரும் தொழில் தர்மத்தின்படி இந்த விபரத்தை இறுதிவரை ரகசியமாக வைத்திருந்தனர்.

இந்த ரகசியம் காக்கப்பட்டதால் மட்டுமே பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவாவது சாத்தியமானது என்பதை அங்கீகரிக்கும் வகையில் தற்போது 'நிஷான்-ஏ-இம்தியாஸ்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்குரிய விருதுகள் வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள அதிகாரப்பூர்வ விழாவில் வழங்கப்பட உள்ளன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel