கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ரூ.1.83 லட்சம் கோடியாக இருந்த மொத்த ஜிஎஸ்டி வசூல், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ரூ.2.11 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல், கடந்த மாதம் ரூ.1.95 லட்சம் கோடியாக இருந்த வசூலும் தற்போது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
மேலும் நாட்டின் ஜூலை மாத சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூல் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 15.4 சதவீதம் உயர்வாகும். மத்திய அரசின் தரவுகளின்படி, இந்த மாத ஜிஎஸ்டி வசூலில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (CGST) ரூ.39,835 கோடியாக பதிவாகியுள்ளது.
மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST) ரூ.47,881 கோடியாகவும், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (IGST) ரூ.1.23 லட்சம் கோடியாகவும் வசூலாகியுள்ளது.
ஜிஎஸ்டி பகிர்வின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டிற்கு ரூ.7,391 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.


0 Comments