டிஎன்பிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று கோவை கிங்ஸ் - மதுரை பேந்தர்ஸ் அணிகள் மோதின. அந்த அணி வெல்லும் மூன்றாவது டிஎன்பிஎல் பட்டமாக இது அமைந்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட் செய்த கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது.
மதுரை பேந்தர்ஸ் அணி தரப்பில் சரவணன் 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து 183 ரன்கள் இலக்குடன் மதுரை பேந்தர்ஸ் அணி பேட்டிங் செய்ய ஆயத்தமானது.
இரண்டாவது இன்னிங்ஸின் 14.2 ஓவர்களில் 98 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது மதுரை. இதன் மூலம் 84 ரன்களில் கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
இதில் ஆட்ட நாயகன் விருதை ஆந்த்ரே சித்தார்த்தும், தொடர் நாயகன் விருதை பாலசுப்ரமணியம் சச்சினும் வென்றனர்.


0 Comments