Recent Post

6/recent/ticker-posts

மத்திய அரசு 28 மாநிலங்களுக்கு ரூ.1,09,019 கோடியை வரிப் பகிர்வுத் தொகையை விடுவித்தது / Central Government releases ₹1,09,019 crore in tax devolution to 28 states

மத்திய அரசு 28 மாநிலங்களுக்கு ரூ.1,09,019 கோடியை வரிப் பகிர்வுத் தொகையை விடுவித்தது / Central Government releases ₹1,09,019 crore in tax devolution to 28 states

நடப்பு பொருளாதார ஆண்டு மத்திய பட்ஜெட்டில் (2026-27), மாநிலங்களுக்கு வரிப் பகிர்வு மூலமாக மொத்தம் ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் வழங்க இருப்பதாக கூறப்பட்டது. இதில் 16வது நிதி ஆணையம் பரிந்துரைத்ததன் அடிப்படையில், மாநிலங்களின் வரிப் பகிர்வு பங்கு தொடர்ந்து 41 சதவீதமாகத் தக்க வைக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்திற்கு மட்டும் ரூ.4,466 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்திய மாநிலங்கள் வளர்ச்சித் திட்டங்களை எவ்வித தடையும் இன்றி செயல்படுத்த இந்தத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு வெளியிட்ட நிதிப் பகிர்வில் அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்திற்கு அதிகபட்சமாக ரூ.19,208 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் உத்தரபிரதேசம் - ரூ.19,208 கோடி, பீகார் - ரூ.10,845 கோடி, மத்திய பிரதேசம் - ரூ.8,010 கோடி, மேற்கு வங்கம் - ரூ.7,866 கோடி, மகாராஷ்டிரா - ரூ.7,022 கோடி, ராஜஸ்தான் - ரூ.6,460 கோடி, ஒடிஷா - ரூ.4,819, ஆந்திர பிரதேசம் - ரூ.4,597 கோடி, கர்நாடகா -ரூ.4,504 கோடி, தமிழ்நாடு - ரூ.4,466 கோடி, ஜார்க்கண்ட் - ரூ.3,660 கோடி என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel