Recent Post

6/recent/ticker-posts

பீகாரில், முசாஃபர்பூர்-சீதாமர்ஹி-சோன்பர்சா இடையே தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிப்பாதையாக மேம்படுத்த ரூ.3,590.73 கோடி மதிப்பீட்டிலானத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் / Union Cabinet Committee Approves ₹3,590.73 Crore Project to Upgrade Muzaffarpur-Sitamarhi-Sonbarsa National Highway Section in Bihar to Four Lanes

பீகார் மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை - 22-ன். முசாஃபர்பூர்-சீதாமர்ஹி - சோன்பர்சா வழித்தடத்தை, 4-வழிச் சாலையாக மேம்படுத்தும் திட்டத்திற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

82.578 கி.மீ நீளம் கொண்ட இத்திட்டம், மொத்தம் ரூ.3,590.73 கோடி மூலதனச் செலவில், பொது - தனியார் துறை முதலீட்டுடன் செயல்படுத்தப்படும்.

பீகாரின் விரிவடைந்து வரும் தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள இத்திட்டம், குறிப்பிடத்தக்க பொருளாதார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

இது இந்தியா-நேபாள எல்லைப் பகுதியில் உள்ள சோன்பர்சாவையும், தேசிய நெடுஞ்சாலை-27-ல் (கிழக்கு-மேற்கு வழித்தடம்) உள்ள முசாஃபர்பூர் போன்ற பொருளாதார மையங்களையும் இணைக்கும் ஒரு முக்கியப் பாதையாக அமையும்.

முசாஃபர்பூர், முக்ஸுத்பூர், ருன்னி சையத்பூர், தும்மா, டும்ரா, புதாஹி, சோன்பர்சா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில், போக்குவரத்து நெரிசலை இத்திட்டம் கணிசமான அளவில் குறைக்கும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel