தரவுகளின் அடிப்படையில், முக்கிய உணவுப் பொருட்களின் விலை அதிகரித்ததன் காரணமாக, ஜூலை மாதம் சில்லறை விற்பனை விலை அடிப்படையிலான பணவீக்கம் 4.45% அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நுகர்வோர் விலைக் குறி அடிப்படையாகக் கொண்ட சில்லறை பணவீக்கம் ஜூன் மாத 4.38 சதவீதமாக இருந்தது தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட நுகர்வோர் விலைக் குறியீட்டை தரவுகளின் அடிப்படையில், ஜூலை மாதம் உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் கடந்த மாதத்திலிருந்த 5.32% இருந்து 5.52% உயர்ந்துள்ளது.
நுகர்வோர் விலைக் குறியீட்டை 4 சதவீத அளவில் பராமரிக்கும் பொறுப்பைக் கொண்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கி, பணவீக்கம் குறித்த கவலைகளைக் கருத்தில் கொண்டு, இம்மாதத் தொடக்கத்தில் குறுகிய கடன் வட்டி விகிதத்தை மாற்றமின்றி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


0 Comments