கடந்த ஜூலை மாதத்தில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.1% ஆக குறைந்துள்ளது. ஜூன் மாதத்தில் இந்த விகிதம் 5.5% ஆக இருந்த நிலையில், தொழிலாளர் பங்கேற்பு அதிகரித்துள்ளதால் இம்மாதம் வேலைவாய்ப்பின்மை விகிதம் சற்று குறைந்துள்ளது.
தேசிய புள்ளியியல் ஆய்வகத்தின் காலமுறையிலான தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பின்படி, தொழிலாளர் சக்தி பங்கேற்பு விகிதம் மொத்தமாக 55.4 சதவிகிதத்தில் இருந்து 54.4 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
புள்ளி விவரங்களின்படி, வேலைவாய்ப்பின்மை குறைவுக்கு கிராமப்புறங்கள் முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.7 சதவிகிதமாக மாற்றம் காணாமல் உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில், ஒட்டுமொத்த மற்றும் கிராமப்புற வேலையின்மை விகிதங்கள் ஏறக்குறைய நிலையாகவே உள்ளன.
அதேவேளையில், நகர்ப்புற வேலையின்மை விகிதம் ஜூலை 2025-ல் இருந்த 7.2 சதவீதத்திலிருந்து ஜூலை 2026-ல் 6.7 சதவீதமாக 0.5 சதவீதப் புள்ளிகள் குறைந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 Comments