Recent Post

6/recent/ticker-posts

மக்களவையில் 'கேரளம்' பெயர் மாற்றச் சட்ட மசோதா நிறைவேற்றம் / Bill to Rename State as 'Keralam' Passed in Lok Sabha

மக்களவையில் 'கேரளம்' பெயர் மாற்றச் சட்ட மசோதா நிறைவேற்றம் / Bill to Rename State as 'Keralam' Passed in Lok Sabha

மலையாள மொழியில் மாநிலத்தின் பெயர் 'கேரளம்' என்று அழைக்கப்படும் நிலையில், அரசியல் சாசனத்தின் முதல் அட்டவணையில் 'கேரளா' எனப் பதிவாகியுள்ளது. 

இதனையடுத்து, மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என மாற்றக் கோரி கேரள சட்டமன்றத்தில் 2024 ஜூன் 24 அன்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநிலங்களின் எல்லைகள் மற்றும் பெயர்களை மாற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கும் இந்திய அரசியலமைப்புப் பிரிவு 3-ன் கீழ், கேரளம் பெயர் மாற்ற நடைமுறைகளை மத்திய அரசு தொடங்கியது. 

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளிக்கு இடையே, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் 'கேரள (பெயர் மாற்றம்) மசோதா, 2026' ஐ மக்களவையில் தாக்கல் செய்தார்.

எவ்வித விவாதமும் இன்றி இம்மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதேபோலக் கூட்டுறவுச் சங்கங்களுக்கான நிதியுதவியை வேகப்படுத்தவும், எளிமைப்படுத்தவும் வழிவகை செய்யும் 'தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழக (திருத்த) மசோதா, 2026' மத்திய இணை அமைச்சர் முரளிதர் மோஹலால் அவையில் தாக்கல் செய்யப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel