Recent Post

6/recent/ticker-posts

வருகையில்லா ஆவணப்பதிவு எனும் புதிய இணையவழி சேவை திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார் / Chief Minister Vijay Launches New Online Service 'Presenceless Registration'

வருகையில்லா ஆவணப்பதிவு எனும் புதிய இணையவழி சேவை திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார் / Chief Minister Vijay Launches New Online Service 'Presenceless Registration'

தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் இன்று (17.8.2026) தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில், தமிழ்நாட்டில் உள்ள மனைப்பிரிவில் முதல் மனை விற்பனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் வீடு விற்பனை ஆவணங்களைப் பதிவுத்துறையில் இணையவழியில் வருகையில்லா ஆவணப்பதிவு (Presenceless Registration) மூலம் மட்டுமே கட்டாயமாகப் பதிவுசெய்யும் நடைமுறையை தொடங்கி வைத்தார்.

பதிவுத்துறையில் ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்த பொதுமக்கள் தாங்களே நேரடியாக இணையவழியில் ஆவணங்களைப் பதிவுசெய்யும் முறையினை ஏற்கனவே பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஆவணப்பதிவு முறையின் மூலம் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் (Anywhere Registration) பதிவுத்துறை இணையதளத்தின் மூலம் இணையவழியில் தங்களது ஆவணங்களைப் பதிவு செய்து கொள்ள முடியும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel