Recent Post

6/recent/ticker-posts

ரிசர்வ் வங்கி நிர்வாக வாரியத்திற்கு இயக்குனராக இஸ்ரோ மாஜி தலைவர் சோமநாத் நியமனம் / Former ISRO Chief S. Somanath Appointed as Director on RBI Board

ரிசர்வ் வங்கி நிர்வாக வாரியத்திற்கு இயக்குனராக இஸ்ரோ மாஜி தலைவர் சோமநாத் நியமனம் / Former ISRO Chief S. Somanath Appointed as Director on RBI Board

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் எஸ்.சோமநாத், ரிசர்வ் வங்கியின் நிர்வாக வாரியத்தின் பகுதிநேர இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவராகப் பணியாற்றி பல்வேறு விண்வெளி சாதனைகளைப் படைத்து கடந்த 2025ம் ஆண்டு ஜனவரியில் ஓய்வுபெற்ற விண்வெளி ஆய்வு நிபுணர் எஸ்.சோமநாத், பெங்களூரு அருகே உள்ள சாணக்யா பல்கலைக்கழகத்தின் வேந்தராகப் பொறுப்பு வகித்து வந்தார்.

இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் மத்திய நிர்வாக வாரியத்தில் பகுதிநேர அதிகாரப்பூர்வமற்ற இயக்குனராக எஸ்.சோமநாத் 4 ஆண்டுகள் பதவி வகிக்கும் வகையில், வரும் 20ம் தேதி முதல் அமலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்தராவின் பதவிக்காலமும் ரிசர்வ் வங்கி வாரியத்தில் மேலும் 4 ஆண்டுகளுக்கு பகுதிநேர இயக்குனராக நீட்டிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel