மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
சவுதி அரேபியாவின் மெக்காவில் உள்ள அல்-சஃபா அரண்மனையில் கூட்டுப்பாதுகாப்புக்கான மெக்கா அல் -முகார்மா உச்சிமாநாடு நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாகிஸ்தான், சவுதி மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் ஆகியோர் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி இந்த மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீதான தாக்குதலானது அவை மற்ற இரு நாடுகள் மீதான தாக்குதலாகவே கருதப்படும்.
இந்த ஒப்பந்தம் எந்தவொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராகவும் கூட்டுத்தடுப்பு ஆற்றலை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.


0 Comments