Recent Post

6/recent/ticker-posts

சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் / Chief Minister Vijay made three important announcements in the Legislative Assembly under Rule 110

சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் / Chief Minister Vijay made three important announcements in the Legislative Assembly under Rule 110

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று காவல்துறை-தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

அப்போது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-இன் கீழ், முதல்-அமைச்சர் விஜய் பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

அதன்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும்.

தமிழ்நாட்டில் ஒரு புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக்கப்படும். இந்த நகரத்தில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் பந்தயத்தடம், அதற்கான நவீன உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பயிற்சி வசதிகள் ஏற்படுத்தப்படும்.

சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel