டெல்லியில் உள்ள யசோபூமி கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் செமிகான் இந்தியா 2026 மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு, துவாரகா பகுதியில் அமைந்துள்ள யசோபூமி கன்வென்ஷன் சென்டரில் தொடங்கியது.
மாநாட்டைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்டார். மேலும், கண்காட்சியில் இடம்பெற்றுள்ள தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளிடம் விளக்கங்களையும் கேட்டறிந்தார்.
"சிலிக்கான் முதல் சிஸ்டம் வரை சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குதல்" என்ற கருப்பொருளில் இந்த மூன்று நாள் மாநாடு நடைபெறுகிறது. இதில் 52 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், 400-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர்.

0 Comments