ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்தியா இதுவரை மொத்தம் 45 பதக்கங்களை (4 தங்கம், 20 வெள்ளி, 21 வெண்கலம்) வென்றுள்ளது; தற்போது பதக்கப் பட்டியலில் 12-வது இடத்தில் உள்ளது.
தடகளம் - ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் ரோஹித் யாதவ் வெள்ளிப் பதக்கத்தையும், யாஷ் வீர் சிங் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
தடகளம் - ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் இறுதிப் போட்டியில் ஸ்ரீசங்கர் முரளி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
தடகளம் - ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தய இறுதிப் போட்டியில் குல்வீர் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
துப்பாக்கி சுடுதல் - பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவு இறுதிப் போட்டியில் ஈஷா சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
குராஷ் (Kurash) - பெண்களுக்கான -78 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் தென் கொரியாவின் மோ சுமின்னிடம் தோல்வியடைந்த பிங்கி பல்ஹாரா, வெண்கலப் பதக்கம் வென்றார்.
தடகளம் - பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தய இறுதிப் போட்டியில் வித்யா ராமராஜ் வெண்கலப் பதக்கம் வென்றார்; அனு ராகவன் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.
தடகளம் - பெண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப்பந்தய இறுதிப் போட்டியில் பருல் சவுத்ரி வெண்கலப் பதக்கம் வென்றார்.


0 Comments