பிரதமர் திரு நரேந்திர மோடி, குஜராத்தின் வதோதராவில் ரூ 35,000 கோடிக்கு மேல் மதிப்புடைய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்து, அர்ப்பணித்தார் அப்போது உரையாற்றிய அவர் இப்பெரும் விழாவில் நேரடியாகவும் இணைவழியாகவும் பங்கேற்றுள்ளவர்களை வரவேற்பதாகக் கூறினார். குஜராத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளை தாம் வரவேற்பதாக திரு மோடி குறிப்பிட்டார்.
மகாராஜா சாயாஜி ராவ் பல்கலைக்கழக மைதானத்தில் நிலவிய உற்சாகமிக்க சூழலைச் சுட்டிக்காட்டிய பிரதமர், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் வளர்ச்சிக் கொண்டாட்டத்திற்கான ஒன்றுகூட உள்ளதன் சிறப்பம்சத்தைப் பாராட்டினார்.

0 Comments