Recent Post

6/recent/ticker-posts

தில்லி, ஜம்மு-கஷ்மீர், லடாக், ஜார்க்கண்ட், கர்நாடக உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் நியமனம் / Appointment of Judges to the High Courts of Delhi, Jammu & Kashmir, Ladakh, Jharkhand, and Karnataka

தில்லி, ஜம்மு-கஷ்மீர், லடாக், ஜார்க்கண்ட், கர்நாடக உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் நியமனம் / Appointment of Judges to the High Courts of Delhi, Jammu & Kashmir, Ladakh, Jharkhand, and Karnataka
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசனை மேற்கொண்ட பிறகு, பல்வேறு உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை குடியரசுத்தலைவர் நியமித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், பின்வரும் உயர்நீதிமன்றங்களுக்கு 14 நீதித்துறை அதிகாரிகள், நீதிபதிகள், கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, திருமதி நிவேதிதா அனில் சர்மா, திருமதி நிஷா சகாய் சக்சேனா ஆகியோர் தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

திரு சஞ்சய் சர்மா, திரு பரத் பராஷர், டாக்டர் அதிதி சௌத்ரி, திரு தினேஷ் பட், திரு அருண் பரத்வாஜ் ஆகியோர் தில்லி உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திரு யாஷ் பால் போர்னி, ஜம்மு-காஷ்மீர், லடாக் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திரு மனோஜ் பிரசாத், திரு அகில் குமார், திரு ராம் சர்மா ஆகியோர் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருமதி உஷாராணி, திரு கே எஸ் பரத் குமார், திருமதி நெரலே வி பவானி ஆகியோர், கர்நாடக உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel