இந்தியாவின் விண்வெளித் திட்டத்தில் மற்றொரு முக்கிய சாதனையாக, இஸ்ரோவின் GSLV-F17 ராக்கெட் EOS-05 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை அதிகாலை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்ட இந்த செயற்கைக்கோள், திட்டமிடப்பட்ட Sub-Geosynchronous Transfer Orbit எனப்படும் துணை புவிநிலை மாற்று சுற்றுப்பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டது.
EOS-05 செயற்கைக்கோள் புவிநிலை சுற்றுப்பாதையில் இருந்து செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் இமேஜிங் செயற்கைக்கோள் ஆகும். பூமியின் பரந்த பகுதிகளை அடிக்கடி படம் பிடித்து கண்காணிக்க இந்த செயற்கைக்கோள் உதவும்.
இதன் மூலம் புவி கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கான இந்தியாவின் செயற்கைக்கோள் திறன் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
GSLV வரிசையில் இது 17வது ராக்கெட் என்றாலும், இந்தியாவின் Geosynchronous Satellite Launch Vehicle திட்டத்தின் 19வது பயணமாகும்.
4 மீட்டர் விட்டம் கொண்ட ஓஜிவ் வடிவ கலப்பு பேலோட் ஃபேரிங்குடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ராக்கெட், EOS-05 செயற்கைக்கோளை Sub-GTO சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


0 Comments