Recent Post

6/recent/ticker-posts

ரூ. 3108 கோடி மதிப்பிலான சென்னையின் புதிய குடிநீர் திட்டத்திற்கு முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார் / Chief Minister Vijay Lays Foundation Stone for Chennai’s New ₹3,108 Crore Drinking Water Project

ரூ. 3108 கோடி மதிப்பிலான சென்னையின் புதிய குடிநீர் திட்டத்திற்கு முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார் / Chief Minister Vijay Lays Foundation Stone for Chennai’s New ₹3,108 Crore Drinking Water Project

சென்னையின் குடிநீர் விநியோகக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.3,108.55 கோடியில் செயல்படுத்தப்படவுள்ள பிரதான சுற்றுக்குழாய் திட்டத்திற்கு முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார்.

சென்னை பெருநகரப் பகுதிகளில் சுமார் 85.7 லட்சம் மக்களுக்கு 84 குடிநீர் விநியோக அமைப்புகள் மூலம் நாளொன்றுக்கு 1,200 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. தற்போது 5 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் 3 கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. 

நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட நான்காவது கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

தற்போதைய குடிநீர் விநியோகக் கட்டமைப்பில், ஒரு நீராதாரத்தில் பற்றாக்குறை ஏற்படும்போது மற்றொரு நீராதாரத்திலிருந்து உபரி நீரைத் தேவையான பகுதிகளுக்கு மாற்றுவதில் சிக்கல் நிலவுகிறது. இதனைத் தீர்க்கும் வகையில், சென்னையைச் சுற்றி 98 கி.மீ. நீளத்துக்கு பிரதான சுற்றுக்குழாய் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel