கேரளம் மாநிலத்தின் புதிய ஆளுநராக முன்னாள் சிக்கிம் மாநில ஆளுநரான ஓம் பிரகாஷ் மாத்தூர் கேரளம் லோக் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேரளம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சௌமென் சென் புதிய ஆளுநருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
கேரளம் மாநிலத்தின் ஆளுநராகவும் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகவும் பதவி வகித்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழகத்தின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில் கேரளம் மாநில ஆளுநராக ராஜஸ்தானை சேர்ந்த ஓம் பிரகாஷ் மாத்தூரை நியமித்து உத்தவிட்டப்பட்டிருந்தது.
ராஜஸ்தான் மாநிலத்தில் 1952 ஆம் ஆண்டு ஓம் பிரகாஷ் மாத்தூர் பிறந்தார். அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பில் செயல்பட்டுவந்தார். பாஜகவில் முக்கிய பொறுப்பு வகித்துள்ளார்.
ஓம் பிரகாஷ் மாத்தூர் கடந்த 2024ஆம் ஆண்டு சிக்கிம் மாநில ஆளுநராக பதவியேற்றார். இன்று கேரளம் மாநில ஆளுநராக பதவியேற்றார். நிகழ்ச்சியில் கேரளம் முதல்வர் சதீசன் பலர் பங்கேற்றனர்


0 Comments