கர்நாடகத்தின் புதிய கவர்னராக சுதா யாதவை கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியான விபு பக்ரு இன்று பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
கர்நாடக மாநில கவர்னராக தாவர்சந்த் கெலாட் இருந்த நிலையில், தாவர்சந்த் கெலாட் மாற்றப்பட்டு. அவருக்கு பதிலாக புதிய கவர்னராக சுதா யாதவை கடந்த 12-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்து உத்தரவிட்டார்.
சுதா யாதவ் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். அவரது கணவர் சுக்பீர் சிங் யாதவ் எல்லை பாதுகாப்பு படை யில் கமாண்டராக பணியாற்றி, கார்கில் போரில் மரணம் அடைந்திருந்தார்.


0 Comments