இந்தியாவின் நீலப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகளில் மீன்வளத்துறையை நவீனமயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டின் கடல்சார் வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி மீன் உற்பத்தி, கடல்பாசி வளர்ப்பு, திருக்கை மற்றும் சூரை மீன் உற்பத்தி உள்ளிட்ட நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு ரூ.218 கோடியும், லட்சத்தீவுகளுக்கு ரூ.175 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தீவுப் பகுதிகள் நாட்டின் பிரத்யேகப் பொருளாதார மண்டலத்தில் பெரும் பகுதியை உள்ளடக்கியுள்ளன. மேலும், மீன்பிடித்தலுக்கான வாய்ப்புகளும் இங்கு அதிகம் உள்ளன.
பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தீவுப் பகுதிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உள்ளூர் சந்தைகளுக்கும் ஏற்றுமதிக்கும் உயர்தர மீன் வகைகளை எளிதில் கொண்டு செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.


0 Comments