Recent Post

6/recent/ticker-posts

நொய்டாவில் 8.449 கிலோ மீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில் வழித்தடத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves extension of the Metro rail corridor in Noida by 8.449 kilometers

நொய்டாவில் 8.449 கிலோ மீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில் வழித்தடத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves extension of the Metro rail corridor in Noida by 8.449 kilometers

நொய்டா மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் நொய்டா செக்டர் 51-லிருந்து கிரேட்டர் நொய்டா செக்டர் 4 வரை 8.449 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஐந்து மேம்பால நிலையங்களுடன் விரைவு மெட்ரோ ரயில் வழித்தடத்தை நீட்டிப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. 

இந்த வழித்தடம் செயல்பாட்டிற்கு வரும்போது நொய்டா, கிரேட்டர் நொய்டா நகரங்களில் 71.878 கிலோ மீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில் கட்டமைப்பு இருக்கும்.

நொய்டா மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக நொய்டா செக்டர் 51-லிருந்து கிரேட்டர் நொய்டா செக்டர் 4 வரை விரைவு மெட்ரோ ரயில் வழித்தடத்தை நீட்டிப்பது என்பது நகரத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் ஒரு சிறந்த முன்னேற்றத்தை குறிப்பிடுகிறது. இத்திட்டம் அந்நகரத்தில் மெட்ரோ ரயில் கட்டமைப்பில் பெரிய விரிவாக்கமாக அமைகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel