Recent Post

6/recent/ticker-posts

நீர்நிலைகளை சீரமைக்க ஏரி இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய் / Chief Minister Vijay Launches 'ERI' (Lake) Portal for the Restoration of Water Bodies

நீர்நிலைகளை சீரமைக்க ஏரி இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய் / Chief Minister Vijay Launches 'ERI' (Lake) Portal for the Restoration of Water Bodies

தமிழகத்தில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளைப் புனரமைக்கும் பணிகளில் தன்னார்வலர்கள் மற்றும் அரசுசாரா அமைப்புகளின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு புதிய முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.

இதற்காக நீர்வளத் துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள 'ஏரி' (ERI) என்ற புதிய இணையதளத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். 

இதன் மூலம் நீர்நிலைகளைச் சீரமைக்க விரும்பும் அரசுசாரா அமைப்புகள், பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களுக்குச் சென்று தடையின்மைச் சான்றிதழ் பெறுவதற்காகக் காத்திருக்க வேண்டிய அவசியம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த இணையதளத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் விஜய், நீர்நிலைகளைப் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ளத் தேர்வு செய்யப்பட்ட அரசுசாரா அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குத் தடையின்மைச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel