தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான மாநில கானுயிர் வாரியம் புதிய உறுப்பினர்களுடன் மாற்றியமைக்கப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளது.
மாநில கானுயிர் வாரியத்தில் அந்தந்த மாநில முதலமைச்சர் தலைவராகவும், வனத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் உறுப்பினர்களாகவும் செயல்படுவது வழக்கம்.
வாரியத்தின் சட்ட விதிகளின்படி, மாநிலச் சட்டமன்றத்தில் இருந்து 3 சட்டமன்ற உறுப்பினர்கள் இடம்பெறுவது கட்டாயமாகும்.
அதனடிப்படையில், காட்பாடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சுதாகர், மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்திகேயன் மற்றும் திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பல்லவி ஆகிய 3 எம்.எல்.ஏ-க்கள் மாநில கானுயிர் வாரியத்தின் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.


0 Comments